Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விருதுநகர் : பட்டாசு வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழப்பு!

சாத்தூர் அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
01:28 PM Aug 09, 2025 IST | Web Editor
சாத்தூர் அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
Advertisement

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜய கரிசல்குளம் கிழக்கு தெருவை சேர்ந்த பொன்னுபாண்டியன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் அனுமதி இன்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்துள்ளனர்.

Advertisement

இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மின்சார உராய்வின் காரணமாக பட்டாசுகள் வெடித்து சிதறி உள்ளது. இந்த வெடி விபத்தில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த கீழகோதை நாச்சியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (21), விஜய கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி (70), சண்முகத்தாய் (60) ஆகிய இரண்டு பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு
சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த மாரியம்மாள் 90 சதவீத தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சட்டவிரோதமாக வீட்டில் வைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதாக வீட்டின் உரிமையாளர் பொன்னுபாண்டி மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
explosionfirecrackerinvestiationPoliceSaturVirudhunagar
Advertisement
Next Article