விராட் கோலியின் அதிரடி... பஞ்சாபை வீழ்த்தி பெங்களூரு அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2025 தொடரின் 37-ஆவது போட்டியில் முல்லன்பூர் திடலில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பஞ்சாப் அணி களமிறங்கி பேட்டிங் செய்தது. 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பெங்களூரு அணிக்கு 158 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் 33 ரன்களும், ஷஷாங்க் சிங் 31 ரன்களும் அடித்தனர்.
பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக க்ருணால் பாண்டியா, சுயாஷ் சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 158 ரன்களை இலக்காக கொண்டு பெங்களூரு அணி பேட்டிங்கை தொடங்கியது. அதன்படி 18.3 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் அடித்து பெங்களூரு அபார வெற்றிப் பெற்றது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது.