Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விராட் கோலி பிறந்தநாள் ஸ்பெஷல்; இன்றாவது சச்சினின் அசாத்திய சாதனையை மிஞ்சுவாரா ?

10:14 AM Nov 05, 2023 IST | Web Editor
Advertisement

விராட் கோலி தனது பிறந்தநாள் தினத்தன்று ஒரு ஒருநாள் போட்டியில் கூட விளையாடியது இல்லை; இன்றாவது சச்சினின் அசாத்திய சாதனையை மிஞ்சுவாரா கோலி?

Advertisement

இந்தியர்கள் மட்டுமல்ல வெளிநாட்டவர்கள் கூட விரும்பும் ஒரு டாப் கிளாஸ் பேட்ஸ்மேன் என்றால் அது விராட் கோலி தான். மிஸ்டர் கன்சிஸ்டன்சியாக இருக்கும் விராட் கோலி, வருடத்திற்கு வருடம் பல புது சாதனைகளை படைதும், பல ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்தும் வருகிறார். விராட் கோலி என்றால் நமது நினைவுக்கு வருவது என்னவாக இருக்கும்?

களத்தில் அவரது ஆக்ரோஷமான செயல்பாடுகளால் அணியின் வெற்றி பிரமாண்டமானதாக இருக்கக்கூடும் அல்லவா... அவரது செலபிரேஷன், பீல்டிங் திறன், அணியை வழிநடத்தும் விதம், சக வீரர்களை உற்சாகப் படுத்துவது, எதிரணி வீரர்களை உற்சாகப்படுத்துவது, நடனம், இமிடேட் செய்வது என அனைத்திலும் பவர்புல் எனர்ஜியான கோலியை தான் நீங்கள் பார்க்க முடியும்.

சரி விராட் கோலிக்கு இன்று 35 ஆவது பிறந்தநாள் தினம். ஆனால் 35 வயதில் இவ்வளவு ஆக்டிவான ஒருவர் அதும் முன்பு இருந்ததை விட அதிக பவர்புல்லான திறனுடன் இருக்க முடியுமா? என ஆச்சரியப்படும் வித்தத்திலான அவரது செயல்பாடுகள் தான் இந்திய அணிக்கும், இந்திய அணியின் ரசிகர்களுக்கும் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.

அவரது இந்த சிறப்பான தினத்தில், மேலும் ஒரு சிறப்பு என்ன தெரியுமா? அதாவது விராட் கோலி தனது பிறந்தநாள் தினத்தன்று முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறார். தனது 15 வருட கிரிக்கெட் பயணத்தில் முதல் முறையாக தனது பிறந்தநாள் தினத்தன்று, இன்று தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலி விளையாடுகிறார்.

சரி, அதே சமயம் அவர் தனது பிறந்தநாள் தினத்தன்று விளையாடிய மற்ற போட்டிகளை பார்ப்போமா?

2015 இல் மொஹாலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தென்னாப்பிரிக்கா அணியுடனான போட்டியில் விளையாடினார். அந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் 1 ரன்னும், இரண்டாவது இன்னிங்ஸில் 29 ரன்களையும் அடித்திருந்தார் கோலி.

அடுத்ததாக 2021 டி20 உலகக் கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார் விராட். அப்போட்டியில் 2 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், தென்னாப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் போட்டியில், 2015 இல் தனது பிறந்தநாள் தினத்தன்று கேப்டனாக அறிமுகமானார் கோலி. அதே சமயம் 2021 இல் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான T20 உலகக் கோப்பை தொடரே டி20 கேப்டனாக அவரது கடைசி தொடராக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் விராட் கோலியின் பிறந்தநாள் தினத்தை ஒட்டிய போட்டிகள் எவை எவை என்று தெரியுமா?

2013 இல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற தினம் (நவம்பர் 6) விராட் கோலியின் பிறந்தநாளுக்கு அடுத்த தினமாகும். அப்போட்டியில் கோலி விளையாடியிருந்தார்.

2014 இல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியை, தனது பிறந்தநாள் தினத்திற்கு அடுத்த நாள் (நவ.6) விளையாடினார் கோலி.

2017 இல் நியூசிலாந்து அணிக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் தனது பிறந்தநாளுக்கு முந்தைய தினம் (நவ.4) விளையாடினார் கோலி.

2020 ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியை அபுதாபியில் (நவ.6) பிறந்தநாளுக்கு அடுத்த நாள் விளையாடினார் கோலி.

2022 இல் மெல்போர்ன் இல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலகக் கோப்பை டி20 போட்டியில் தனது பிறந்தநாளுக்கு அடுத்த தினமான நவ.6 இல் விளையாடினார் கோலி.

எனவே தனது ஒட்டுமொத்த கரியரிலும் தனது பிறந்தநாள் தினத்தில் ஒரு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் கூட விராட் கோலி விளையாடியது இல்லை. இதுவே முதல் முறையாக இருப்பதால், இன்று இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி கிங் கோலியின் ஸ்பெஷலான போட்டியாக அமையுமா என மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

மேலும் இன்றைய போட்டியில் விராட் கோலி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 49 ஆவது சதத்தை நிறைவு செய்தால், ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் 49 சதங்கள் அடித்த ஒரே விரர் என்ற பெருமையையும், சச்சின் டெண்டுல்கரின் சாதனையும் சமன் செய்வார். இந்த நிகழ்வுக்கான தினமாக இது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

சச்சின் டெண்டுல்கர் தனது 463 ஒரு நாள் போட்டிகளில் 452 இன்னிங்ஸ்களில் விளையாடி 49 சதங்கள் அடித்திருக்கிறார். அதே சமயம் விராட் கோலி தனது 289 போட்டிகளில் 277 ஆவது இன்னிங்ஸில் 49 சதங்களை அடித்து, அதிவேகமாக இதனை செய்து முடித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார் என பெரிதும் நம்பப்படுகிறது.

எனவே இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கிங் கோலி ஸ்பெஷல் தான் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. இந்த நவீன கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாக வளம் வரும் விராட் கோலிக்கு நடப்பு உலகக் கோப்பை ஒருவேளை கடைசி தொடராக இருக்குமோ என நினைப்பவர்களுக்கு திருபதிகரமான சம்பவமாக இன்றைய போட்டி இருந்திட கூடும் என கிங் கோலியின் ரசிகர்கள் பட்டாளம் ஈடன் கார்டன் மைதானம் மட்டுமல்ல, உலகெங்கிலும் காத்திருக்கிறது.

Advertisement
Next Article