For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"விராட் கோலி ஒரு மிகச் சிறந்த வீரர்!" - தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் புகழாரம்!!

05:58 PM Nov 05, 2023 IST | Web Editor
 விராட் கோலி ஒரு மிகச் சிறந்த வீரர்     தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் புகழாரம்
Advertisement

விராட் கோலி ஒரு மிகச் சிறந்த வீரர் எனவும், அவரது தலைமுறை வீரர்களுக்கு அவர் வழிகாட்டியாக இருப்பதாகவும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி அவரது 35-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இந்த நிலையில், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது:

விராட் கோலி ஒரு மிகச் சிறந்த வீரர். அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடக் கூடியவர். அதிலும் குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் அவர் மிகச் சிறப்பாக விளையாடக் கூடியவர். ஒருநாள் போட்டிகளில் அவர் ஆட்டத்தை எடுத்துச் செல்லும் விதம் மற்றும் ஆட்டத்தினை முடிக்கும் விதம் தனித்துவமானது. அவரது சாதனைகள் அவர் தலைமுறை வீரர்களுக்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த உந்துசக்தியாக இருக்கும் என்றார்.

சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி நடப்பு உலகக் கோப்பையிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement