For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#ViralVideo | அறையில் மறைந்திருந்த பாம்பு... வைரலாகும் வீடியோ!

02:57 PM Aug 26, 2024 IST | Web Editor
 viralvideo   அறையில் மறைந்திருந்த பாம்பு    வைரலாகும் வீடியோ
Advertisement

இன்ஸ்டகிராம் பயனர் ஒருவர் தனது அறையில் பாம்பு மறைந்திருந்ததை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்த நிலையில், அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

அமெரிக்க கடற்படை அணுசக்தி தொழில்நுட்ப துறையில் பணியாற்றிய ஜோயி ஜோசல்சன் என்பவர், தனது அறைக்கு தூங்க சென்றிருக்கிறார். அப்போது அவர் கட்டிலுக்கு அருகில் ஏதோ சப்தம் கேட்டுள்ளது. உடனே அவர் எழுந்து கட்டிலுக்கு அடியில் பாம்பின் சட்டை கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அறை முழுவதும் தேடி பார்த்தார். அப்போது கட்டிலுக்கு அருகில் உள்ள மேசைக்கு பின்புறத்தில் பாம்பு ஒன்று இருந்தது.

அந்த பாம்பை எடுத்த ஜோசல்சன் தனது தோலில் போட்டுக் கொண்டு கண்ணாடி முன் நின்று காட்டுகிறார். இது முழுவதையும் வீடியோவாக பதிவு செய்த அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். கடந்த 23ம் தேதி பகிரப்பட்ட இந்த வீடியோ  11.7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் பலர் அந்த வீடியோக்களை லைக் செய்துள்ளனர்.

சிலர் இந்த இடுகைக்கு கருத்து தெரிவித்துள்ளனர். பயனர் ஒருவர், "நீங்கள் அவரை தத்தெடுத்துக் கொள்ளுங்கள்" என்றார். மற்றொருவர், "அதிகாலை 02:00 மணி ஆகிறது, எனது அறையில் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அறை முழுவதையும் சுற்றிப் பார்க்க வேண்டியிருந்தது. அது என்னைப் பதற வைத்தது" என்றார். வேறொரு பயனர், "எனக்கும் அதேதான் நடந்தது. பாம்பை நாங்கள் கண்டுபிடிக்கவே இல்லை. பாம்பின் தோல் குறைந்தது 3 அடி இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tags :
Advertisement