Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ம.பியில் பெண்ணை நிர்வாணமாக அடித்து இழுத்துச் செல்லும் #ViralVideo - தற்போதையதுதானா?

12:00 PM Nov 12, 2024 IST | Web Editor
Advertisement

This news Fact checked by Vishvas news

Advertisement

பெண் ஒருவர் நிர்வாணமாக தாக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு இது ஈரான் அல்ல பெண்களை தெய்வமாக மதிக்கும் இந்தியாதான் என குறிப்பிட்டிருந்தார்.இந்த வீடியோ குறித்த உண்மைத் தன்மையை பற்றி விரிவாக காணலாம்.

சமீபத்தில் ஈரானில் உள்ள பல்கலைகழகத்தில் பெண் ஒருவர் ஆடையின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இஸ்லாமிய ஆடைக் கலாச்சாரத்திற்கு எதிராக போராடும் விதமாக தெரிவித்த அவர் ஆடைகளை அரைநிர்வாணத்துடன் போராடியது உலகளவில் வைரலானது. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள சமூக வலைதள பயனர் ஒருவர் ஒரு வீடியோவை பகிர்ந்து இது ஈரான் அல்ல பெண்களை தெய்வமாக மதிக்கும் இந்தியாதான் எனக் குறிப்பிட்டிருந்தார்.அவர் பகிர்ந்த வீடியோவில் பெண் ஒருவர் நிர்வாணமாக தாக்கப்பட்டு இழுத்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

நவம்பர் 5, 2024 அன்று வைரலான இந்த வீடியோவைப் 'அன்சாரி சாஹில்' என்ற பெயர் கொண்ட பயனர் பகிர்ந்து "இது ஈரான் அல்ல, பெண்களை தெய்வம் என்று அழைக்கும் இந்துஸ்தான்.. ஈரான் மீது அக்கறை உள்ளவர்கள் இதையும் பார்க்க வேண்டும். "  என எழுதியிருந்தார். இந்த சமூக வலைதளங்களில் வைரலானது.

வைரல் வீடியோ - உண்மை என்ன ?

சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து விஸ்வாஸ் நியூஸ் ஆய்வுக்கு உட்படுத்தியது. அதன்படி இந்த வீடியோவின் கீ-பிரேம்களை பிரித்து அதனி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு உட்படுத்தியபோது இந்த காணொளி 2019 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் அலிராஜ்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் என தெரிய வந்தது. மாற்று சமூகத்தை சார்ந்த ஆண் ஒருவரை காதலித்ததற்காக இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்த ஆய்வில் NDTV யின் செய்தி அறிக்கையின்படி , செப்டம்பர் 4, 2019 அன்று, பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள அலிராஜ்பூர் மாவட்டத்தில், மாற்று சமூகத்திரை காதலித்ததற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு அப்பெண்ணை ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதேபோல செப்டம்பர் 4, 2019 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி , அலிராஜ்பூர் மாவட்டத்தின் அம்புவா காவல் நிலையப் பகுதியில் நடந்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் மத்தியப் பிரதேச காவல்துறையிடம் அறிக்கை கேட்டதாகவும் இந்த வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுத்து 3 பேரை கைது செய்தனர் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்த கூடுதல் தகவலுக்கு, இந்தூரில் உள்ள நாயுடுனியா.காம், துணை செய்தி ஆசிரியர் அரவிந்த் துபேயைத் தொடர்புகொண்டு பேசியபோது வைரலான கூற்று தவறானது என்று அவர் நியூஸ் விஸ்வாஸிடம் தெரிவித்தார். மேலும் இந்த காணொளி ஐந்து வருடங்களுக்கு முன்பு அலிராஜ்பூரில் நடந்த ஒரு சம்பவம் எனவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

முடிவு: சமூக வலைதளங்களில் வெளியான இந்தக் காணொளி 2019 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் அலிராஜ்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் என்றும் இது சமீபத்தியது என தவறாக பரப்பப்படுகிறது என்றும் உறுதியாகியுள்ளது.

Note : This story was originally published by ‘Vishvas news’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Fact CheckFakemadya pradeshMisleadingviral video
Advertisement
Next Article