For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜான்ஸி ராணி லட்சுமி பாயின் படம் எனவும் பரவும் #ViralImage - உண்மை என்ன?

06:56 PM Nov 11, 2024 IST | Web Editor
ஜான்ஸி ராணி லட்சுமி பாயின் படம் எனவும் பரவும்  viralimage   உண்மை என்ன
Advertisement

This news Fact checked by Vishvas news

Advertisement

சுதந்திர போராட்ட வீராங்கனை ராணி லட்சுமி பாயின் புகைப்படம் என ஒரு படம் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதன் உண்மைத் தன்மை குறித்து விரிவாக காணலாம்.

சுதந்திரப் போராட்ட வீராங்கனையும் ஜான்சி பகுதியின் ராணியுமான லட்சுமி பாயின் படம் எனக் கூறி ஒரு படம் இணையத்தில் வைரலானது. இப்படம் 159 ஆண்டுகளுக்கு முன்பு ஹாஃப்மேன் என்ற புகைப்படக் கலைஞர் எடுத்த படம் என்றும், ஆகஸ்ட் 19, 2024 அன்று போபாலில் நடந்த உலக புகைப்பட காட்சியில் இந்தப் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டதாகவும் பகிரப்பட்ட பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நவம்பர் 1ம் தேதி சலாம் இந்தியா எனும் பெயர் கொண்ட ' பேஸ்புக் பயனர் ' இப்படத்தை பகிர்ந்துள்ளார். அப்பதிவில் “இது ஜான்சி ராணியின் உண்மையான புகைப்படம். இது 159 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் புகைப்படக் கலைஞர் ஹாஃப்மேன் என்பவரால் எடுக்கப்பட்டது. இப்படத்திற்கு ஒரு லைக் போடுங்கள்” எனவும் அவர் அப்பதிவில் தெரிவித்திருந்தார்.

உண்மை என்ன ?

ராணி லட்சுமி பாயின் படம் என வைரலான படத்தின் உண்மைத்தன்மை குறித்து விஸ்வாஸ் நியூஸ் ஆய்வுக்கு உட்படுத்தியது. இந்த பதிவின் முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி Google தேடலை மேற்கொண்ட போது 2010 இல் பகிரப்பட்ட மிகப் பழைய பதிவைக் காண முடிந்தது. 2010 இல்  வெளியான இப்பதிவு அக்காலகட்டத்தில் பேஸ்புக் பயனர்களால் பரவலாகப் பகிரப்பட்டது. மேலும் இதே புகைப்படத்தை ' apexfactsofficial' என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் காண முடிந்தது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான படம் குறிப்பிடத்தக்க வகையில் தெளிவாகவும் நவீனமாகவும் தோன்றியது. இப்படத்தை கூகுள் ரிவர்ஸ் தேடலுக்கு உட்படுத்தியபோது ஜூன் 25, 2010 அன்று வெளியிடப்பட்ட இந்தியா டுடே இணையதளத்தில் வெளியான செய்திகளுக்கு அந்த தேடல் அழைத்துச் சென்றது. மேலும் ஜான்சி ராணி பற்றி விரிவான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிய பல வரலாற்றாசிரியர்களின் அறிக்கைகளும் கிடைக்கப்பெற்றது. அதில் 'War of Civilization: India AD 1857' என்ற புத்தகத்தை எழுதிய அம்ரேஷ் மிஸ்ரா, “ஜான்சி ராணியின் இப்படத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை எனவும் அவரது ஓவியங்கள் தவிர புகைப்படம் இருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேபோல, 1850 களில் புகைப்படம் எடுத்தல் சாத்தியமில்லை எனவும் இதனால் ராணி லட்சுமி பாயின் உண்மையான படம் இருப்பது கடினம் எனவும் வரலாற்றாசிரியர் மஹ்மூத் ஃபரூக்கி தெரிவித்துள்ளார். விஸ்வாஸ் நியூஸின் தேடுதலில் நவம்பர் 11, 2017 அன்று வெளியிடப்பட்ட பிபிசி இணையதளத்தில் ராணி லட்சுமி பாயின் புகைப்படம் தொடர்பாக நடந்து வரும் சர்ச்சையைப் பற்றிய காண முடிந்ததாக தெரிவித்துள்ளது.

மேலும் ராணி லட்சுமிபாயின் வழக்கறிஞரும் ஆஸ்திரேலிய பத்திரிகையாளருமான ஜான் லாங் கூகுள் புக்ஸில் எழுதிய ' Wanderings in India ' புத்தகம் கிடைத்தது .  இந்த புத்தகம் ராணி லட்சுமிபாயின் தோற்றம் மற்றும் ஆளுமை ஆகியவற்றை விவரிக்கிறது. இதில் இடம்பெற்ற தகவல்கள் வைரலான படத்திலிருந்து வேறுபடுகிறது. எனவே ராணி லக்ஷ்மிபாயின் படம் என வைரலான படம் அவருடையது அல்ல என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Metmuseum இன் இணையதளத்தில், புகைப்படம் எடுத்தல் வரலாறு தொடர்பான அறிக்கையில் கிடைத்த தகவல்களின்படி, 1850 ஆம் ஆண்டில் புகைப்படம் தெளிவான மற்றும் உயர்தர புகைப்படத்தை கிளிக் செய்வது அந்த நேரத்தில் சாத்தியமற்றது என குறிப்பிட்டுள்ளது ஜான்சியைச் சேர்ந்த வரலாற்றாசிரியரும், ராணி லட்சுமிபாய் பற்றிய ஆராய்ச்சியாளருமான முகுந்த் மெஹ்ரோத்ராவைத் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் வைரலான படம் தவறானது என்பதை உறுதிப்படுத்தினார்.

முடிவு: 

ஜான்சி ராணி லட்சுமி பாயின் படம் என பகிரப்படும் புகைப்படம் அவருடையது அல்ல என்பது விஸ்வாஸ் நியூஸ் நடத்திய ஆய்வில் வரலாற்றுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது

Note : This story was originally published by ‘Vishvas news’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement