ஆயுதங்களை வைத்திருந்த இளைஞர்களை உ.பி போலீசார் தாக்கியதாக வைரலாகும் வீடியோ - உண்மை என்ன?
This News Fact Checked by ‘ PTI ‘
உத்தரபிரதேச காவல்துறையைப் பாராட்டி சமூக ஊடகங்களில் வீடியோவையை பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில், இரண்டு சிறுவர்கள் கூர்மையான ஆயுதங்களுடன் சாலையில் கடைக்காரர்களுடன் சண்டையிடுவதைக் காணலாம். அதன் பிறகு போலீசார் அவர்களில் ஒருவரைப் பிடித்து அடிக்கும் இந்த காணொளியை உ.பி.யைச் சேர்ந்தது என்றும் கூறி வைரலாக்கி வருகின்றனர்.
PTI Fact Check இன் விசாரணையில் வைரலான கூற்று போலியானது என்பதை கண்டறிந்துள்ளது. வைரலான வீடியோ உ.பி.யைச் சேர்ந்தது அல்ல, மாறாக மகாராஷ்டிராவைச் சேர்ந்தது என்பது எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது, கூர்மையான ஆயுதங்களை வைத்திருந்ததாக போலீசார் குற்றவாளியைக் கைது செய்தனர்.
X தளப் பயனர் ராஜேஷ் சிங் பிப்ரவரி 21, 2025 அன்று வைரலான வீடியோவைப் பகிர்ந்து, ”உ.பி.யில் "பாபா" ஜியின் அரசாங்கம் இருக்கிறதா இல்லையா என்பதை அப்துல் மறந்துவிட்டார்!" என்று எழுதியிருந்தார். பதிவின் இணைப்பு, காப்பக இணைப்பு மற்றும் ஸ்கிரீன்ஷாட்டை இங்கே காண்க.
அதே நேரத்தில், மற்றொரு பயனர் பிப்ரவரி 20, 2025 அன்று X இல் வைரலான பதிவைப் பகிர்ந்துகொண்டு, “ஆஹா யோகி ஜியின் காவல்துறை ஜிஹாதியை அடித்து துவைத்தது” என்று எழுதினார். வைரல் இடுகையின் இணைப்பு, காப்பக இணைப்பு மற்றும் ஸ்கிரீன்ஷாட்டை இங்கே காண்க.
உண்மை சரிபார்ப்பு :
வைரல் கூற்றின் உண்மையை அறிய, கூகுள் லென்ஸ் மூலம் வீடியோவின் 'கீ பிரேம்களை' ரிவர்ஸ் இமேஜ் தேடலை டெஸ்க் மேற்கொண்டது. இதன் போது, டிசம்பர் 29, 2022 அன்று 'MIRROR NOW' என்ற செய்தி வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையை நாங்கள் கண்டோம், வைரலான வீடியோவின் காட்சி அறிக்கையில் இருந்தது. 'MIRROR NOW' அறிக்கையின்படி, "மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது, அங்கு ஒரு குழு பல கடைகளை சேதப்படுத்தியது. ஆயுதம் ஏந்திய இந்த குற்றவாளிகள் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தினர்.
விசாரணையின் அடுத்ததாக, டிசம்பர் 30, 2022 அன்று ஆஜ் தக் என்ற செய்தி வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட மற்றொரு ஊடக அறிக்கையை நாங்கள் கண்டோம், அதன்படி, “புனே நகரின் பாரதிய வித்யாபீடம் காவல் நிலையப் பகுதியின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, அங்கு டிசம்பர் 28 அன்று இரண்டு இளைஞர்கள் தங்கள் கைகளில் கத்திகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களுடன் கடைகளுக்குச் சென்று மக்களை மிரட்டி காயப்படுத்தினர்.
இந்த நிலையில் பிடிஐ இன் விசாரணையில், உத்தரப்பிரதேசத்தில் குண்டர்களை காவல்துறை கைது செய்வதாக சமூக ஊடக பயனர்களால் பகிரப்படும் காணொலி உண்மையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்தது என்பது தெளிவாகிறது. அங்கு கூர்மையான ஆயுதங்களைக் காட்டி குற்றம் சாட்டப்பட்டவரை காவல்துறை கைது செய்தது.
Note : This story was originally published by ‘ PTI ‘ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.