வங்கதேசத்தில் இந்து பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என வைரலாகும் வீடியோ - உண்மையா?
This news Fact Checked by Newsmeter
வங்கதேசத்தில் இந்து பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்
பெண்களை 2பேர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஆண்கள் முதலில் பெண்களிடம் பேசுவதும், பின்னர் கட்டையால் அடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய வீடியோ இது எனவும் இந்துக்களுக்கு எதிரான அட்டூழியம் எனவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஃபேஸ்புக் பயனர் ஒருவர் இந்த வீடியோவைப் பகிர்ந்து, "வங்காளதேசத்தில் வீட்டை விட்டு வெளியேறிய இந்து பெண்கள் மீது தாக்குதல். இந்துக்களே கவனமாக இருங்கள். எச்சரிக்கையாக இருங்கள், உங்களுக்கும் ஒரு நிலை வரும்," என்று எழுதியிருந்தார்.
உண்மைச் சரிபார்ப்பு:
இந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை நியூஸ் மீட்டர் சரிபார்த்தபோது, இந்த வீடியோ தவறான கூற்றுடன் வைரலாகி வருவது தெரியவந்தது. இந்த காணொளி 2022 ஆம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேசத்தில் நிலத்தகராறு தொடர்பான சண்டை இது. வீடியோ குறித்த உண்மையை அறிய வைரலான வீடியோவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தோம். இதன் முடிவில் ஜூன் 3, 2022 அன்று வங்க தேச உள்ளூர் செய்தி ஊடகமான Prothom Alc தனது YouTube சேனலில் வெளியிட்ட அதே வைரல் வீடியோவைப் பெற்றோம். வங்கதேசத்தின் சட்டோகிராமில் உள்ள சீதகுண்டில் நிலத் தகராறு தொடர்பாக இரு குழுக்களிடையே சண்டை ஏற்பட்டது. இந்த சண்டையில் பெண் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என வீடியோ பதிவாகியுள்ளது.
அதன் பிறகு Prothom Alo யூடியூப் சேனலில் கொடுக்கப்பட்ட தலைப்பை காப்பி செய்து கூகுளில் தேடினோம். அப்போது இந்த சம்பவம் தொடர்பாக சில செய்திகள் கிடைத்தன. வங்கதேச உள்ளூர் இணையதளமான சங்பாத் ஜூன் 8, 2022 அன்று அதே வைரல் வீடியோவின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்வதன் மூலம் செய்தியை வெளியிட்டது. தகவலின்படி, தாக்குதல் நடத்தியவர்களின் பெயர்கள் தெளஹிதுல் இஸ்லாம் மற்றும் ஆலம்கிர் ஹுசைன். இவர் அந்தப் பகுதியின் செல்வாக்கு மிக்க மனிதரான அமினுல் ஹக்கின் மகன். ராணி தாஸ் (30), அஞ்சனா ராணி தாஸ் (32), ரீமா ராணி தாஸ் (27) ஆகிய 3 பெண்கள் தாக்கப்பட்டனர். கடந்த சில ஆண்டுகளாக நிலம் தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து தெளஹிதுல் ஆலம்கீர் ஆகியோர் பெண்களை சரமாரியாக தாக்கினர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது” என அச்செய்தியில் இடம்பெற்றிருந்தது.
இதேபோல ஜூன் 4, 2022 அன்று இந்த சம்பவம் குறித்து டாக்கா ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது. சட்டோகிராமில் உள்ள பாஷ்பரியா யூனியனில் உள்ள சோர்போட் டோலா பகுதியில் ப்ளாக்பெர்ரி பழங்களை பறித்ததற்காக மூன்று பெண்கள் தாக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தது.
முடிவு :
வங்கதேசத்தில் இந்து பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் செய்தி பொய்யானது என தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த இரு பிரிவினர் ஈடுபட்டாலும், சமீபத்தில் நடந்த சம்பவத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பதில் உறுதியாகியுள்ளது.
Note : This story was originally published by Newsmeter and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.