Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தமிழ் சினிமாவை மாற்றக் கூடிய திறமை வினோத்ராஜூக்கு இருக்கிறது” -கொட்டுக்காளி இயக்குநரை பாராட்டிய சிவகார்த்திகேயன்!

03:32 PM Aug 13, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ் சினிமாவை மாற்றக் கூடிய திறமை கொட்டுக்காளி திரைப்படத்தின் இயக்குநர் வினோத்ராஜூக்கு இருப்பதாக அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். 

Advertisement

நடிகர் சூரி, மலையாள நடிகை அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘கொட்டுக்காளி’. ‘கூழாங்கல்’ வினோத் ராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். ஆக.23-ம் தேதி இப்படம் வெளியாகிறது.

இந்நிலையில் கொட்டுக்காளி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் திரையரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி, இயக்குநர்கள் லிங்கு சாமி, மிஷ்கின், வெற்றிமாறன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கொட்டுக்காளி படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

“ஒரு படம் எடுத்தால் அதில் இருந்து சம்பாதிக்க வேண்டும் என்பது ரொம்ப முக்கியம். ஆனால் நான் சம்பாரிப்பதற்கு ரசிகர்கள் நீங்கள் ஒரு பெரிய மார்கெட் உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். அதனால் நான் போய் நேர்மையாக என் வேலை செய்தால் எனக்கு கொஞ்சம் காசு கிடைக்கும் . அதனால் இந்த கொட்டுக்காளி படம் வெற்றிபெற்றால் அதன் மூலமாக எனக்கு வாழ்க்கை கொடுத்த சினிமாவுக்கு நான் ஏதாவது திருப்பி செய்ய முடியும்.

நான் கல்லூரி படிக்கும் போது அதிகமான படங்களை பார்த்திருக்கிறேன். அப்போது தான் நான் பாலாஜி சக்திவேல் , லிங்குசாமி , கெளதம் மேனன் போன்ற இயக்குநர்கள் இயக்கிய படங்களைப் பார்த்து தான் நான் வந்தேன். பாரதிராஜா தொடங்கி இன்று சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வெற்றிமாறன் வரை சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்ற இயக்குநர்களுக்கு ஒரு ரசிகனாக நான் கொடுக்கும் புகழாரமாகதான் நான் இந்த கொட்டுக்காளி படத்தைப் பார்க்கிறேன். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இல்லை என்று வினோத் ராஜ் சொன்னபோது அது சாத்தியமாகுமா என்கிற கேள்வி எனக்கு இருந்தது. ஆனால் இந்த படத்தின் கதாபாத்திரங்களோடு பார்வையாளர்கள் பயணிக்க வேண்டும் என்பதால் இசை வேண்டும் என்று இயக்குநர் சொன்னார். இந்த படம் நிச்சயம் உங்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும் அதனால் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த படத்திற்கு ஆதரவு கொடுங்கள்.

அப்போது தான் இந்த மாதிரியான  படங்கள் பார்ப்பவர்களுக்கு இது ஒரு பெரிய நம்பிக்கை. நாங்கள் சினிமாவை மாற்றப்போகும் ஆள் கிடையாது. ஆனால் சினிமாவை மாற்றக்கூடிய திறமை வினோத்ராஜூக்கு இருக்கு என்று நினைக்கிறேன். அவருக்கு நாங்கள் எங்களால் முடிந்த உதவியை செய்கிறோம்.  இந்த படத்திற்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவு நன்றாக இருந்தால் எஸ்.கே ப்ரோடக்‌ஷன் சார்பாக இன்னும் நிறைய இயக்குநர்களை அடையாளப் படுத்துவோம். இந்த இயக்குநருக்கு நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று எல்லாம் சொல்லமாட்டேன். ஏனென்றால் என்னை அப்படி சொல்லி சொல்லி பழகிட்டார்கள். நான் அந்த மாதிரியான ஆள் இல்லை. ஆனால் நான் என்னுடைய நண்பர் ஒருவரை அறிமுகப் படுத்துவது போலதான் இந்த படத்தை உங்கள் முன் வைக்கிறேன் ” என்று சிவகார்த்திகேயன் பேசினார்.

Tags :
'Kottukali'Actor sooridirector mishkinkollywood cinemakottukali trailersivakarthikeyan
Advertisement
Next Article