For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரீ-ரிலீஸில் சாதனை… 1000 நாட்களைக் கடந்தது #VinnaithaandiVaruvaayaa!

06:03 PM Oct 21, 2024 IST | Web Editor
ரீ ரிலீஸில் சாதனை… 1000 நாட்களைக் கடந்தது  vinnaithaandivaruvaayaa
Advertisement

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படம் ரீ-ரிலீஸில் சாதனை படைத்துள்ளது.

Advertisement

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த திரைப்படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. பின்னணியில் ஏ.ஆர் ரகுமான் இசை, திரையில் கார்த்திக் - ஜெஸியின் காதல் ரசிகர்களைப் படம் வெளியாகி 14 ஆண்டுகள் அடந்துள்ளது. 2010ம் ஆண்டு வெளியான இப்படம் இன்றும் காதலர்களின் விருப்பப் படமாகவே நீடிக்கிறது.

இதையும் படியுங்கள் : Google தலைமை தொழில்நுட்ப நிபுணராக இந்தியாவை சேர்ந்த பிரபாகர் ராகவன் நியமனம்!

திரைக்கு வந்த 14 ஆண்டுகளில் ஒவ்வொரு காதலர் நாளன்றும் சிறப்பு திரையிடலைக் கண்டு வருகிறது. முக்கியமாக, சென்னை பி.வி.ஆர் வி.ஆர் திரையில் ரீ-ரிலீஸில் இப்படம் இன்றுடன் 1000-வது நாளைக் கொண்டாடுகிறது. இந்த வி.ஆர் திரையில் மட்டும் கடந்த 142 வாரங்களாக இப்படம் ஒரு காட்சியாவது திரையிடப்பட்டு வருகிறது. இந்தியளவில் ரீ-ரிலீஸில் அதிக நாள்களைக் கடந்த திரைப்படம் என்கிற சாதனையை பெற்றுள்ளது விண்ணைத்தாண்டி வருவாயா. தமிழ் சினிமாவில் இதுவரையில் வெளியான காதல் திரைப்படங்களில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு.

Tags :
Advertisement