For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஐநாவின் யுனிசெப் அமைப்பில் இடம் பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி வினிஷா உமாசங்கர்!

12:14 PM May 06, 2024 IST | Web Editor
ஐநாவின் யுனிசெப் அமைப்பில் இடம் பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் விஞ்ஞானி வினிஷா உமாசங்கர்
Advertisement

UNICEF India-ன் அறிவியல், தொழில்நுடபம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பிரிவின் தேசிய இளைஞர் பிரதிநிதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வினிஷா உமாசங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

ஐநாவின் யுனிசெப் (UNICEF) அமைப்பு,  தொடர்ந்து 75 ஆண்டுகளாக இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.  யுனிசெப் அமைப்பு இந்தியாவில் கோடிக்கணக்கான குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் திட்டங்கள் போன்றவற்றை செயல்படுத்த அரசுக்கு வழிவகை செய்துள்ளது.

இந்நிறுவனம் குழந்தைகள்,  பெண்கள்,  சுகாதாரம்,  ஊட்டச்சத்து,  நீர் மற்றும் சுகாதாரம், கல்வி ஆகியவற்றை ஊக்குவிக்க தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்,  முதன்முறையாக இளைஞர் பிரதிநிதிகளையும் யுனிசெப் இந்தியா நியமனம் செய்து உள்ளது.

இவர்கள் காலநிலை நடவடிக்கை,  மனநலம்,  கண்டுபிடிப்புகள் மற்றும் பெண்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறையில் முன்னோடிகள். 16 முதல் 24 வயதுடைய இந்த நான்கு பிரதிநிதிகளுக்கும் குறிப்பிட்ட ஆர்வமுள்ள பகுதிகள் உள்ளன.

விளையாட்டு உரிமை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்சேர்ப்புப் பிரதிநிதியாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கௌரன்ஷி சர்மா,  காலநிலை நடவடிக்கை மற்றும் குழந்தைகள் உரிமை பிரதிநிதியாக  உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கார்த்திக் வர்மா,  மனநலம் மற்றும் குழந்தைப் பருவ வளர்ச்சியின் அசாமைச் சேர்ந்த நாஹித் அஃப்ரின்,  தமிழ்நாட்டைச் சேர்ந்த வினிஷா உமாசங்கர் ஆர்வமுள்ள கண்டுபிடிப்பாளர் மற்றும் ஸ்டெம் துறையில் முன்னோடி அறிவியல்,  தொழில்நுட்பம்,  பொறியியல் மற்றும் கணிதம்(STEM) பிரிவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இளம் பிரதிநிதிகள் யுனிசெப் உலக திட்டத்தின் ஒரு பகுதி,  உலகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களைப் பற்றிய பிரச்சினைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 93 க்கும் மேற்பட்ட இளம் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வினிஷா உமாசங்கர்: 

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினிஷா உமாசங்கர்.  சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க சூரிய மின்சக்தியில் இயங்கும் தெருவோர இஸ்திரி வண்டியை  உருவாக்கி கவனம் பெற்றவர் வினிஷா.

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தொடங்கிய Earthshot Prize விருதுக்கான இறுதிப் போட்டிக்கு தேர்வானவர்களில் வினிஷாவும் ஒருவர்.  இந்நிலையில், UNICEF India-ன் அறிவியல்,  தொழில்நுடபம்,  பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பிரிவின் தேசிய இளைஞர் பிரதிநிதியாக வினிஷா உமாசங்கர் நியமனம் செய்யப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

Tags :
Advertisement