For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு சென்று இந்திய மக்களின் மனதை வென்ற #VineshPhogat தாயகம் திரும்பினார்!

12:23 PM Aug 17, 2024 IST | Web Editor
பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு சென்று இந்திய மக்களின் மனதை வென்ற  vineshphogat தாயகம் திரும்பினார்
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு சென்று 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் பதக்க வாய்ப்பை இழந்த வினேஷ் போகத் தாயகம் திரும்பினார்.

Advertisement

பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 100 கிராம் உடல் எடை கூடியதாக கூறி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் கடும் அதிர்ச்சி அடைந்த வினேஷ் போகத், மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதனிடையே இறுதிப்போட்டிக்கு முன்பாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் அதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் முறையிட்டார். இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார் இந்த நிலையில் வினேஷ் போகத் மனுவை விளையாட்டுக்கான நடுவர் மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

வினேஷ் போகத், பதக்கம் வெல்லாவிட்டாலும், உண்மையில் அவர் நாட்டு மக்களின் மனதை வென்றுவிட்டார். பிரதமர் மோடி, எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி உள்பட விளையாட்டு மற்றும் திரை பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் வினேஷ் போகத் உண்மையான சாம்பியன் என்றே வர்ணித்தனர்.

இந்த நிலையில், பாரீசில் இருந்து வினேஷ் இன்று தாயகம் திரும்பினார். டெல்லி விமான நிலையம் வந்த அவருக்கு மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உறவினர்கள், பொது மக்கள் உற்சாகமா வரவேற்பு அளித்தனர் இதனை தொடர்ந்து செய்தியளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன், நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.என தெரிவித்தார்.

Tags :
Advertisement