ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்குகிறாரா #VineshPhogat? | ரயில்வே வேலையை ராஜிநாமா செய்தார்!
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார் என தகவல் பரவி வரும் நிலையில், இந்திய ரயில்வேயில் அவர் வகித்து வந்த வேலையில் இருந்து அவர் ராஜிநாமா செய்துள்ளார்.
ஹரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஒலிம்பிக் மல்யுத்த வீரர் வினேஷ் போகட் காங்கிரசில் இன்று இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில் ஒலிம்பிக் மல்யுத்த வீரர் வினேஷ் போகட் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் வினேஷ் போகட் காங்கிரசில் இன்று இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் நடைபெறும் விழாவில் அவர் கட்சியில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் வினேஷ் போகட் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்புகளும் இன்று மாலைக்குள் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
- இந்நிலையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார் என தகவல் பரவி வரும் நிலையில், இந்திய ரயில்வேயில் அவர் வகித்து வந்த பொறுப்பில் இருந்து அவர் ராஜிநாமா செய்துள்ளார்.