For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி - அரையிறுதிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்!

05:05 PM Aug 06, 2024 IST | Web Editor
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி   அரையிறுதிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்
Advertisement

ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

Advertisement

சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக் போட்டியாகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரிஸ் நகரில் கடந்த 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள்  ஆகஸ்ட் 11-ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரிஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்த தொடரில் இந்தியா இதுவரை 3 பதக்கங்கள் வென்றுள்ளது.

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் யு சுசாகியுடன் மோதினார். ஜப்பான் வீராங்கனை ஆதிக்கம் செலுத்தினாலும், தொடர்ந்து போராடிய வினேஷ் போகத் 16-ஆவது சுற்றில் ஜப்பான் வீராங்கனையை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் வினேஷ் போகத் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

இதையும் படியுங்கள் : பாரிஸ் ஒலிம்பிக்: ஈட்டி எறிதலில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா!

இது முக்கியமான வெற்றியாக கருதப்படுகிறது. காரணம் உலகின் நம்பர் 1 வீராங்கனையும், 4 முறை உலக சாம்பியனும், டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான ஜப்பானின் யு சுசாகியை இந்திய வீராங்கனை வீழ்த்தியிருப்பது கவனிக்கத்தக்கது. தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் உக்ரைன் நாட்டின் ஒக்ஸானா லிவாஜை 7-5 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு வினேஷ் போகத் முன்னேறினார்.

Tags :
Advertisement