For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"வினேஷ் போகத் தகுதி நீக்கம் : இந்திய ஒலிம்பிக் சங்கம் தலையிட்டு உரிய நீதியை பெற்றுத் தர வேண்டும்" - ராகுல் காந்தி

02:50 PM Aug 07, 2024 IST | Web Editor
 வினேஷ் போகத் தகுதி நீக்கம்   இந்திய ஒலிம்பிக் சங்கம் தலையிட்டு உரிய நீதியை பெற்றுத் தர வேண்டும்    ராகுல் காந்தி
Advertisement

"வினேஷ் போகத் தகுதி நீக்கத்திற்கு எதிராக தலையிட்டு இந்திய ஒலிம்பிக் சங்கம் உரிய நீதியை பெற்றுத் தர வேண்டும்" என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 

Advertisement

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா தரப்பில் 117 வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது  தங்கமோ, வெள்ளியோ கைப்பற்றவில்லை.

பாரிஸ் ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் களமிறங்கி, ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஜப்பானைச் சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை உள்பட 3 வீராங்கனைகளின் சவாலை முறியடித்த வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

இதையும் படியுங்கள் :  வங்கதேச இடைக்கால அரசின் தலைவர்! யார் இந்த முகமது யூனுஸ்?

இன்று அவர் இறுதிப்போட்டியில்  விளையாட இருந்த நிலையில், ஒலிம்பிக் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள வினேஷ் போகத் போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகளவு இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இந்த அறிவிப்பு இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால், 50 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் அமெரிக்க வீராங்கனை சாராவுக்கு வழங்கப்பட்டது.  வெள்ளிப்பதக்கம் யாருக்கும் அளிக்கப்படவில்லை.

உடல் எடையை குறைக்க இரவு முழுவதும் தொடர் உடற்பயிற்சியில் ஈடுபட்டதால் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாவது..

” உலக சாம்பியன் மல்யுத்த வீரர்களை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் பெருமைக்குரிய வினேஷ் போகத் தொழில்நுட்ப காரணங்களால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. இந்த முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையாக எதிர்த்து நாட்டின் மகளுக்கு நீதி வழங்கும் என்ற முழு நம்பிக்கை உள்ளது.

வினேஷ் மனம் தளரக்கூடியவர் அல்ல, அவர் இன்னும் வலுவாக களம் திரும்புவார் என்ற நம்பிக்கை இருகிறது. வினேஷ் நீங்கள் எப்போதும் நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள். இன்றும் உங்கள் பலமாக முழு நாடும் உங்களுடன் நிற்கிறது” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement