For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#VinayagarChaturthi : சென்னை- கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

05:42 PM Sep 04, 2024 IST | Web Editor
 vinayagarchaturthi   சென்னை  கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கம்
Advertisement

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை- கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement

பொதுவாக விழாக்காலங்களில் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கம். மேலும் இந்த சிறப்பு ரயில்கள் பயணிகளின் வசதிக்காக குறிப்பிட்ட காலம் வரை நீட்டிக்கவும் செய்யப்படுகிறது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பயணிகளின் வசதிக்காக சென்னை சென்டிரல் - கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"சென்னை சென்டிரல் - கோவை சிறப்பு ரயில் (06151) நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு திருவள்ளுவர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இரவு 8.28 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 8.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக 11.45 மணிக்கு கோவை சென்றடையும்.

இதையும் படியுங்கள் : Paralympics2024 | குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் சச்சின் சர்ஜேராவ் கிலாரி!

இதேபோல் மறுமார்க்கத்தில் கோவை - சென்னை சென்டிரல் சிறப்பு ரயில் (06152) வருகிற 8ம் தேதி கோவையில் இருந்து 11.30 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக இரவு 1.47 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 1.50 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளுவர் வழியாக மறுநாள் காலை 7.35 மணிக்கு சென்னை சென்டிரல் சென்றடையும்"

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement