Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெளியானது விமலின் ‘தேசிங்கு ராஜா 2’ டீசர்!

எழில் இயக்கத்தில் விமல் நடித்துள்ள ‘தேசிங்கு ராஜா 2’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
08:41 PM Jun 21, 2025 IST | Web Editor
எழில் இயக்கத்தில் விமல் நடித்துள்ள ‘தேசிங்கு ராஜா 2’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
Advertisement

இயக்குநர் எழில் இயக்கம் மற்றும் விமல் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘தேசிங்கு ராஜா’. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவெடுத்த  எழில் அந்த படத்திலும் விமல் நடிக்க வைக்க முடிவெடுத்தார்.

Advertisement

இந்த படத்தில் விமலுடன் இணைந்து ஜனா, பூஜிதா பொன்னடா, ஹர்ஷிதா பண்ட்லாமுரி, புகாஷ், ரவி மரியா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.  ‘தேசிங்கு ராஜா’ படம் வெளியாகி 12 வருடங்களுக்கு பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஜூலை 11 ஆம் தேதி வெளியாகவிருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சுமார் ஒன்றரை நிமிடங்கள் கொண்ட இந்த டீசர் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பெரும்பாலான காதாப்பாத்திரங்கள் போலீஸ் வேடத்தில் இருப்பதுபோல் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

Tags :
Desinguraja 2Desinguraja 2 TeaserEzhilJanaPugazhVemal
Advertisement
Next Article