For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"விழுப்புரம் கிணற்றில் இருந்தது மனிதக் கழிவு அல்ல" - மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

01:22 PM May 15, 2024 IST | Web Editor
 விழுப்புரம் கிணற்றில் இருந்தது மனிதக் கழிவு அல்ல    மாவட்ட ஆட்சியர் விளக்கம்
Advertisement

விழுப்புரம் அருகே கிணற்றில் மனித கழிவு கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,  கிணற்றில் இருந்தது தேன் அடை என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளனர்.

Advertisement

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பாளையம் எனும் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இந்த கிராமத்தின் ஒரே குடிநீர் ஆதாரமான அந்த கிணறு இருக்கிறது.  இந்நிலையில்,  மதுபோதையில் அடையாளம் தெரியாத நபர்கள் கழிவு கழித்ததாக புகார் எழுந்துள்ளது.

கிணற்றின் மீதுள்ள தடுப்பு சுவற்றின் மீது மனித கழிவு இருந்ததாக கூறப்படும் நிலையில் இதனை கண்ட கிராம மக்கள் கஞ்சனூர் காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளனர்.  இந்த விவகாரம் தொடர்பாக கஞ்சனூர் காவல்துறையினர் அப்பகுதியில் விசாரணையை மேற்கொண்டனர்.  பின்னர்,  காவல்துறையினர் அந்த கிணற்றை சோதனை செய்தனர்.

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி  கூறியதாவது :

" விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம்,  கஞ்சனூர் மதுரா கே.ஆர்.பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள குடிநீர் கிணற்றில் கழிவு கலப்பு என்பது தவறான செய்தியாகும். இது தொடர்பாக விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர், காணை வட்டார வளர்ச்சி அலுவலர்,  செயற்பொறியாளர்,  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகியோர் அடங்கிய குழு சம்மந்தப்பட்ட இடத்தினை பார்வையிட்டது.

இதையும் படியுங்கள் : ‘நியூஸ் கிளிக்’ ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா கைது சட்டவிரோதம் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் செயற்பொறியாளர் கிணற்றில் உள்ள நீரை பரிசோதனை செய்ததில் குடிநீர் முற்றிலும் பாதுகாப்பானது என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும்,  கிணற்றில் கழிவு கலந்திருப்பதாக தெரிவித்தது தவறு என்றும்,  அதில் தேன் அடை இருந்தது தெரிய வந்துள்ளது.  கே.ஆர்.பாளையம் கிராமத்தில் வசித்து வரும் பொதுமக்கள் முன்னிலையில் எடுத்துக்காட்டப்பட்டது. மேலும், கிணற்றின் மீது இரும்பு கம்பிகளால் வேலி அமைக்கப்படும்"

இவ்வாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement