விழுப்புரம் | புத்தகங்கள் இருந்தும் அமர்ந்து படிக்க இடமில்லை - பொதுமக்கள் குற்றச்சாட்டு!
விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி பகுதியில் உள்ள நூலக கட்டிடம் உள்ளது. இருப்பினும் இந்த நூலகம் தற்காலிகமாக அங்கன்வாடி மையமாக இயங்கி வருகிறது. அந்த நூலகங்களில் நூற்றுக்கு மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. ஆனாலும், அமர்ந்து புத்தகம் படிப்பதற்கு இட வசதிகள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், அங்கன்வாடிக்கென தனி கட்டிடம் கட்டப்பட்டு 7 மாதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : பணி நிரந்தரம் கோரி போராட்டத்திற்கு புறப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது – இபிஎஸ் கண்டனம்
அந்த கட்டிடம் இதுவரை திறக்கப்படாததால் நூலக கட்டிடத்திலேயே அங்கன்வாடி இயங்கி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால், நூலக கட்டிடத்தை சீரமைத்து இரவு பாடசாலையாக மேம்படுத்தி கொடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த நூலகத்தில் இருந்த 500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மாயமானதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.