கிருஸ்துமஸ் கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள் - விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசல்!
கிருஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சொந்த கார்களில் அதிகம் பேர் பயணிப்பதால் விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகே வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கிருஸ்துமஸ் பண்டிகை வரும் திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ளதால் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை விடபட்டுள்ளது. விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு செல்ல அதிகமான பொதுமக்கள் காரில் பயணித்து செல்கின்றனர்.
இதையும் படியுங்கள் : நிவாரண தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் – எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!
இதன் காரணமாக விழுப்புரம் அருகே ஜானகிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதிகமாக கார்களில் திருச்சி, மதுரை, கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கு செல்வதால் மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தில் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன.
போக்குவரத்து நெரிசலையடுத்து மேம்பால பணிகள் முடிவடைந்த ஒருபகுதியின் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து, போக்குவரத்து போலீசார் நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.