ஆட்சியர் அலுவலம் முன்பு திடீர் தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது | #Villupuram -ல் பரபரப்பு!
விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகம் நுழைவுவாயிலில் மாநிலங்களவை அதிமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கடந்த 3 ஆண்டுகளில் சமூக ஊடகங்கள் வாயிலாக தனக்கு கொலை மிரட்டல், அச்சுறுத்தல் வருவதாகவும், மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு காவல் நிலையத்தில் 21 புகார்கள் அளித்தும் திமுக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
இந்த நிலையில், இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு இன்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வந்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியே சென்று இருப்பதாக காவல்துறையினர் கூறினர்.
இதையும் படியுங்கள் : USElection | அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு? கருத்து கணிப்பில் வெளியான தகவல்!
தான் வருவது தெரிந்தும் வேண்டுமென்றே வெளியே சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தன்னை சந்திக்கும் வரை தான் இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாகக்கூறி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் பகுதியில் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.