Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விழுப்புரம் அரசுப் பேருந்தில் போலி பயண டிக்கெட் விற்பனை - பொதுமக்களிடம் சிக்கிய நபர்...!

01:04 PM Feb 02, 2024 IST | Web Editor
Advertisement

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளில் நடத்துநர் போல சீருடை அணிந்து போலியான பயண சீட்டு கொடுத்து பணம் பெற்று ஏமாற்றிய நபரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

விழுப்புரம் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அரசு பேருந்து நடத்துநர் போல சீருடை அணிந்து அரசு பேருந்துகளில் பயணிகளிடம் போலியான பயணச்சீட்டுகளை கொடுத்து பணம் பெற்றுள்ளார்.  இன்று ( பிப்- 02) காலை முதல் விழுப்புரம் பேருந்துநிலையத்திலிருந்து திருச்சி,  சென்னை,  திண்டிவனம்,  மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் செல்லக் கூடிய 10-க்கும் மேற்பட் அரசு பேருந்துகளில் பயணிகளிடம் போலியான பயணச்சீட்டுகள் கொடுத்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையும் படியுங்கள் ; விசாகப்பட்டினத்தில் இன்று இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 -வது டெஸ்ட் போட்டி!

இதனையறிந்த நடத்துநர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்து நிலையத்தில் சீருடையில் நின்ற அந்த நபரை கண்டுபிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.  அந்த நபரிடம் இருந்து பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்க அடையாள அட்டைகள்,  போலி பயணச்சீட்டுகள்,  மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  மேலும், காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு பொதுமக்களை ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக அவரிடம் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் பேருந்துநிலையத்தில் அரசு பேருந்துகளில் போலியான பயணச்சீட்டு கொடுத்து பணம் பெற்று பொதுமக்களை மோசடி செய்து ஏமாற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
bus standconductorgovt busTicketuniformVillupuram
Advertisement
Next Article