#Parandur விமான நிலையம் திட்டத்துக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் | மறியலில் ஈடுபட்டோர் கைது!
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் அருகே 2-வது பசுமை விமான நிலையம் அமைய உள்ள கிராமத்தில் நிலம் அளவு செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து மக்கள் மறியலில் ஈடுப்பட்டதால் காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர்
கிராமத்தில் அமைய உள்ளது. ஏகனாபுரம் கிராமத்தை மையமாகக் கொண்டு சுற்றியுள்ள 13
கிராமங்களில் புதிய விமான நிலையம் அமைய உள்ளது. இதில் குடியிருப்பு, நிலங்கள்
விவசாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் முழுமையாக பாதிப்புக்கு உள்ளாகும். இந்நிலையில், நாகப்பட்டு கிராமத்தில் இன்று ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார், காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றுள்ளனர்.
இதையும் படியுங்கள் : பண மோசடி வழக்கு | #LaluPrasadYadav, மகன்களுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு
நாகப்பட்டு கிராமத்தில் நிலங்கள் அளப்பது தொடர்பாக அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது, அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கிராம மக்கள், 240 பேர் வசிக்கக்கூடிய இந்த கிராமத்தில் 82 வீடுகள் உள்ளன. மேலும், 250 ஏக்கர் விவசாய நிலங்கள், 3 ஏரிகள், ஒரு குளம், 3 கோயில்கள் உள்ளன. எனவே, நிலம் எடுக்கக் கூடாது குடியிருப்புகள் அகற்றக் கூடாது என தெரிவித்துள்ளனர்.
புதிய விமான நிலையம் எடுப்பதற்கு கிராம மக்கள் முழு எதிர்ப்பை தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கிடையே, 60-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைப்பதற்காக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.