விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
நடைபெறவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு ஆதரவு தருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வரும் 10ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். இதையொட்டி திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “சாதனைகளால் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் திமுகவின் வேட்பாளராக விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அன்னியூர் சிவா உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்!” என கோரிக்கை விடுத்துள்ளார்.
சாதனைகளால் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் @arivalayam-த்தின் வேட்பாளராக விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திரு. அன்னியூர் சிவா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்!#VikravandiByElection #Vote4DMK pic.twitter.com/Oil1HPF5eH
— M.K.Stalin (@mkstalin) July 5, 2024
வீடியோவில், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். சமூக நீதியைக் காக்க இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
இந்தியா கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடும் அன்னியூர் சிவாவை தனியாக அறிமுகம் செய்ய வேண்டிய தேவை இல்லை. அன்போடு மட்டுமல்ல உரிமையோடும் கேட்கிறேன் அன்னியூர் சிவாவை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
திராவிட மாடல் ஆட்சியின் 3 ஆண்டு காலத்தில் செய்த தரப்பட்டுள்ள நலத்திட்டங்களை சொல்ல வேண்டும் என்றால் நேரம் போதாது. வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 20% உள் ஒதுக்கீடு வழங்கியது, திமுக ஆட்சி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.