விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: காலை 9 மணி நிலவரப்படி திமுக முன்னிலை!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 9 மணி நிலவரத்தின்படி, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்துவருகிறார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6-ம் தேதி காலமான நிலையில், இத்தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து ஜூன் 14 முதல் 21-ம் தேதி வரை வேட்புமனு தாக்கலும், 24-ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், 26-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இத்தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சை வேட்பாளர்கள் என 29 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலை அதிமுக புறக்கணிப்பு செய்தது. தேர்தலில் மொத்தம் 82.48% வாக்குகள் பதிவானது.
அதன்பிறகு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இன்று (ஜூலை 13) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
காலை 9 மணி நிலவரம் - திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலைhttps://t.co/WciCN2SiwX | #ResultsWithNews7Tamil | #Tamilnadu | #Villupuram | #Vikravandi | #VikravandiElection | #VikravandiByeElection | #Electionresult | #ElectionResults | #DMK | #MKStalin | #PMK |… pic.twitter.com/MdDz33hmF2
— News7 Tamil (@news7tamil) July 13, 2024
இந்நிலையில் 9 மணி நிலவரத்தின்படி, முதல் சுற்று அறிக்கையில் திமுக 8564 வாக்குகளும், பாமக 3096 வாக்குகளும் மற்றும் நாதக 436 வாக்குகளும் பெற்றுள்ளன. திமுக முன்னிலை வகித்துவருகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் மட்டுமன்றி, பீகார் (1), இமாச்சல் பிரதேசம் (3), பஞ்சாப் (1), உத்தரகாண்ட் (2), மேற்கு வங்காளம் (4), மத்திய பிரதேசம் (1) ஆகிய மாநிலங்களில் உள்ள தொகுதிகள் என மொத்தம் 13 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.