For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் | திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி!

03:11 PM Jul 13, 2024 IST | Web Editor
விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்   திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி
Advertisement

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,440 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Advertisement

விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உயிரிழந்த நிலையில், இத்தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த 10ம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலை அதிமுக புறக்கணிப்பு செய்தது. இந்நிலையில், தேர்தலில் மொத்தம் 82.48% வாக்குகள் பதிவானது.

இதையடுத்து, வாக்கு பதிவிற்கு பின்னர், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இன்று (ஜூலை 13) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

இந்த நிலையில் இறுதி சுற்று நிலவரப்படி, திமுக 1,23,688 வாக்குகளும், பாமக  56,248 வாக்குகளும், நாதக 10,520 வாக்குகளும் பெற்றுள்ளன.  இதன்மூலம் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,440 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.  விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி டெபாசிட் பெற்றார்.  இந்த தேர்தலில் டெபாசிட் பெற 32,582 வாக்குகள் பெற வேண்டிய நிலையில், பாமக வேட்பாளர் சி.அன்புமணி 45,000-க்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளார். மூன்றாம் இடத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,520 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில், டெப்பாசிட் இழந்தார்.

Tags :
Advertisement