Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா மனு தாக்கல்!

12:05 PM Jun 19, 2024 IST | Web Editor
Advertisement

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

Advertisement

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார்.  இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து,  ஜூலை 13ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படயுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மருத்துவர் அபிநயா அறிவிக்கப்பட்டுள்ளார்.  தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக சி. அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது. இதேபோல் தேமுதிகவும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : அமெரிக்கர்களை மணந்த அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை! ஜோ பைடன் அறிவிப்பு!

இந்நிலையில்,  விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.  அப்போது அவருடன் அமைச்சர் பொன்முடி,  திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சன், விழுப்புரம் தொகுதி விசிக எம்பி ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags :
ByElectionsDMKElection2024nominationvikravandi
Advertisement
Next Article