For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மீனவர்கள் சிறைபிடிப்பு தொடர்பாக விவாதிக்க கோரிக்கை - அவை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கிய #VijayVasanth எம்.பி.!

09:26 AM Dec 16, 2024 IST | Web Editor
மீனவர்கள் சிறைபிடிப்பு தொடர்பாக விவாதிக்க கோரிக்கை   அவை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கிய  vijayvasanth எம் பி
Advertisement

மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் அவை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டம் தொடங்கியதில் இருந்தே அதானி விவகாரம், சம்பல் வன்முறை, மணிப்பூர் விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தியா வருகை தந்துள்ள இலங்கை அதிபரிடம் மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமர் மோடி பேசி தீர்வு காண வலியுறுத்தியும், இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக விவாதம் நடத்தவும் கோரிக்கை விடுத்து மக்களவையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவை ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினார்.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் அவை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசில் தெரிவித்துள்ளதாவது,

"நடப்பு 2024ம் ஆண்டில் இதுவரை 350 மீனவர்களும், 49 படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். எனவே இரு நாட்டு மீனவர்களும் எந்த பாதிப்பும் இன்றி மீன்பிடிப்பதை உறுதி செய்யும் வகையிலும், கடல் எல்லையை தெளிவுபடுத்தும் வகையிலும் இந்தியா இலங்கை இடையேயான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து இந்த இடர்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மேலும் மீனவர்கள் பிரச்னையை சுமூகமாக முடிக்கவும், குறிப்பாக மீனவர்களை விரைவாக விடுவிக்கவும் இரு நாட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக வந்துள்ள இலங்கை அதிபரிடம், பிரதமர் நரேந்திர மோடி மீனவர்கள் பிரச்னை குறித்து பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.மீனவர்கள் பிரச்னைகளை களைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீனவர் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழுவை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 608 மீனவ கிராமங்களில் 11 லட்சம் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிரந்தரத் தீர்வுக்கு அரசின் அவசரத் தலையீடு முக்கியமானது.
எனவே இந்த விவகாரம் தொடரபாக அவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும்"

இவ்வாறு காங்கிரஸ் விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Advertisement