For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விஜய்யின் ‘The Goat’ ட்ரெய்லர் #Decode!

06:08 PM Aug 17, 2024 IST | Web Editor
விஜய்யின் ‘the goat’ ட்ரெய்லர்  decode
Advertisement

விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இணையத்தில் ரசிகர்கள் ஏற்படுத்திய சலசலப்பு குறித்து காணலாம்.

Advertisement

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு இயக்கி இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

#TheGoat படத்தில் விஜய்யின் ஒரு கதாபாத்திரத்துக்கு காந்தி என பெயரிடப்பட்டுள்ளது. தொடக்கத்தில் விஜய் யார் என்பது குறித்து நடிகர் பிரசாந்த் பில்டப்புடன் சொல்கிறார். அந்த நேரத்தில் விஜய் தொடர்பான சாகச காட்சிகள், ஆக்‌ஷன் காட்சிகள் வந்து செல்கின்றன. ட்ரெய்லரில் கிராஃபிக்ஸும், விஜய்யின் இளம் வயது தோற்றமும் ரசிகர்களை கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ட்ரெய்லர் மொத்தமாக 2.51 நிமிடங்களில், சுமார் 2 நிமிடங்கள் சண்டைக் காட்சிகள் வந்து செல்கின்றன. அந்த அளவுக்கு சண்டைக் காட்சிகள் கொண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ‘அப்பா’ என ‘பிகில்’ படத்தில் கத்துவது போல இந்தப் படத்திலும் அதே டோனில் கத்தும் காட்சி ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளது. அப்பா - மகன், ஆக்‌ஷன், காதல், நண்பர்கள், புதிய மிஷன், சென்னையில் குண்டு வெடிக்கப்போகுது போன்ற விஜய்யின் முந்தைய படங்களில் பார்த்த காட்சிகளாக ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளதாக நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

வில்லன் கதாபாத்திரத்தில் 80’s மோகன் நடித்திருப்பது போல ட்ரெய்லர் அமைந்துள்ளது. “காந்தி வேஷம் போட்டு பாத்திருக்கேன். முதல் தடவ காந்தியே வேஷம் போட்டு பாக்றேன்” என மோகனுக்கு ட்ரெய்லரில் ஒரு வசனம் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் கில்லி திரைப்படத்தில் விஜய்யின் ரசிக்க வைக்கும் குறும்புத்தனங்கள் போல இந்த படத்திலும் பல காட்சிகள் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 90’s கதாநாயகிகள் லைலா, சினேகா உள்ளிட்டவர்களின் ஒரு சில காட்சிகளும் ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளன.

இதில் பெரிதும் பேசுபொருளான காட்சி என்னவென்றால், “இனிமே சத்தியமா குடிக்கவே கூடாது” என்ற ‘மங்காத்தா’ பட அஜித் வசனம் ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளது. இதனால் ஒருபுறம் அஜித் ரசிகர்கள் தல Reference பயன்படுத்தப்பட்டதாக பகிர்ந்து வருகின்றனர். மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கு இது ஒரு கொண்டாட்டமாகவும், திரை ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதாகவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Tags :
Advertisement