For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஓடிடியில் வெளியானது விஜய்யின் ‘லியோ’ திரைப்படம்!

02:30 PM Nov 24, 2023 IST | Web Editor
ஓடிடியில் வெளியானது விஜய்யின் ‘லியோ’ திரைப்படம்
Advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. மேலும் ஆங்கிலத்திலும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘லியோ’.  த்ரிஷா,  அர்ஜூன்,  சஞ்சய் தத்,  கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 19-ம் தேதி ‘லியோ’ திரைப்படம் வெளியானது.

இத்திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் உலக அளவில் ரூ.461 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தமிழ் சினிமா வரலாற்றில், முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை  ‘லியோ’ படைத்துள்ளது.

இதனையடுத்து இப்படத்தின் வெற்றி விழாவானது கடந்த நவ. 1-ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப்பிரமாண்டமாக நடத்தப்பட்டது. ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற ‘லியோ’ திரைப்படம்,  உலகளவில் ரூ. 600 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.  இப்படம் நவ.24ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் லியோ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் ஆங்கில மொழியிலும் விரைவில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஓடிடி தளத்திலும் சாதனை படைக்கும் என விஜய் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

Tags :
Advertisement