For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“விநாயகர் சதுர்த்திக்கு வரோம்” - 'GOAT' படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

01:19 PM Apr 11, 2024 IST | Web Editor
“விநாயகர் சதுர்த்திக்கு வரோம்”    goat  படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு
Advertisement

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘The Greatest of All Time’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

‘லியோ’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தில் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் த்ரிஷா கேமியோ ரோலில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘The Greatest of All Time’ திரைப்படம் சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் உருவாகி வருவதாகவும், அதில் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் விஜய் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தென்னாப்பிரிக்கா, பேங்காக் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கேரளாவிலும் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ரம்ஜான் வாழ்த்துகளுடன்... விநாயகர் சதுர்த்திக்கு வரோம் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Advertisement