Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மட்ட மட்ட ராஜமட்ட… எங்க வந்து யாருகிட்ட? வெளியானது GOAT படத்தின் 4வது பாடல்!

06:27 PM Aug 31, 2024 IST | Web Editor
Advertisement

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'The G.O.A.T.' படத்தின் 4வது சிங்கிள் ‘மட்ட’ வெளியானது.

Advertisement

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு  இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..

படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக உள்ளது. இது விஜய் அரசியலுக்கு வந்தபிறகு வெளியாகும் முதல் படமாகும். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் நான்காவது பாடலான ‘மட்ட’ வெளியாகி உள்ளது. இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்துள்ளனர்.

Tags :
goatvenkat prabhuvijayYuvan shankar raja
Advertisement
Next Article