For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விஜயின் 'சச்சின்' ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜயின் 'சச்சின்' ரீ-ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
02:12 PM Mar 21, 2025 IST | Web Editor
விஜயின்  சச்சின்  ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு
Advertisement

தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ரஜினியின் 'பாட்ஷா ', 'பாபா' திரைப்படமும் கமலின் 'வேட்டையாடு விளையாடு' , 'ஆளவந்தான்' திரைப்படமும் அதே போல் சூர்யாவின் 'வாரணம் ஆயிரம் ' படமும் தனுஷின் ' யாரடி நீ மோகினி' திரைப்படமும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டன.

Advertisement

அதே போல் நடிகர் விஜயின் கில்லி திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2005ம் ஆண்டு விஜய், ஜெனிலியா ஆகியோர் நடிப்பில் வெளியான 'சச்சின்' திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகி 20 ஆண்டுகள் ஆன நிலையில் ரீ- ரிலீஸ் ஆக உள்ளது. இதன் ரீ-ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ஆதாவது இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Tags :
Advertisement