”முதல்வர் ஸ்டாலினை ”அங்கிள்” என விஜய் பேசியது ஆபாசமான கலாச்சாரமாகும்” - எம்.பி ரவிக்குமார் கண்டனம்!
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை பகுதியில்
சமூகநீதி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இலவச வேலை வாய்ப்பு முகாமில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். தொடர்ந்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர்,
“மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றும் பொழுது தமிழக முதல்வரை "அங்கிள்" என அழைத்து பேசியது மிகவும் கண்டனத்துக்குரியது. மேலும் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு ஆபாசமான கலாச்சாரத்தை விஜய் அறிமுகப்படுத்துகிறார். இந்த பேச்சுக்கு உடனடியாக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் திரு மு க ஸ்டாலின் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மட்டுமல்ல தமிழ்நாட்டின் முதல்வரும் ஆவார்.
தமிழ்நாடு முதல்வரை இழிவு படுத்துவது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சேர்த்து இழிவுபடுத்துவதாக ஆகும். அரசியலில் முதிர்ச்சி இல்லாதவர்களாக அவரது உரையானது காட்டுகிறது. அரசியல் முதிர்ச்சி தற்போது இல்லாதவர்கள் கூட பின்நாளில் முதிர்ச்சி அடையலாம். ஆனால் சீரழிந்த சினிமா கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் அரசியலின் புகுத்துவது என்பது மிகவும் ஆபத்தானது. எனவே இந்த மாதிரியான சீரழிவுகலாச்சாரத்தை தமிழ்நாட்டு அரசியலில் புகுத்த வேண்டாம்”
என தெரிவித்தார்.