Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விஜயகாந்த் நடிப்பில் 'ஊமை விழிகள் 2' - ஆபாவாணன் சூப்பர் அப்டேட்!

12:47 PM Jan 01, 2024 IST | Web Editor
Advertisement

AI தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்த் நடிப்பில் 'ஊமை விழிகள் 2' உருவாக்க திட்டமிட்டுள்ளதாக ஆபாவாணன் தெரிவித்துள்ளார்.

Advertisement

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். விஜயகாந்த்தின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள்,  திரையுலக பிரபலங்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படியுங்கள் : “நான் பொறுப்பில் இருந்தால் அமைச்சர் உள்பட அனைவரையும் உள்ளே வைத்துவிடுவேன்!” – முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல்!

இவரது நடிப்பில் 1986 ஆகஸ்ட் 15ல் திரைக்கு வந்து வெற்றி பெற்ற 'ஊமை விழிகள்' என்ற படத்தின் மூலமாக திரைப்படக் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. இப்படத்தை ஆர். அரவிந்தராஜ் இயக்கினார். ஆபாவாணன் எழுதி தயாரித்தார். விஜயகாந்த், சரிதா,  சசிகலா, அருண் பாண்டியன், வாகை சந்திரசேகர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கார்த்திக், ஸ்ரீவித்யா, தேங்காய் சீனிவாசன், டிஸ்கோ சாந்தி உள்ளிட்டோர் நடித்தனர். 

சமீபத்தில் திரைப்படக் கல்லூரி மாணவர்களை சந்தித்த ஆபாவாணன், மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பேசினார். அப்போது அவர்,  "ஊமை விழிகள் 2 படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், Al தொழில்நுட்பத்தின் மூலம் விஜயகாந்தை மீண்டும் உயிர் பெறச் செய்து நடிக்க வைக்கப்படும்" என ஆபாவாணன் தெரிவித்தார்.

இந்த தகவல் விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
cinema updatedirectornew movieVijayakanth
Advertisement
Next Article