Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை தீவுத்திடலில் வைக்கப்படும்! இறுதி ஊர்வலம் எங்கு நடைபெறும் எனவும் தேமுதிக அறிவிப்பு!

08:40 PM Dec 28, 2023 IST | Web Editor
Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை தீவுத்திடலில் வைக்கப்படும் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பாக தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைமை கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் ‘கேப்டன்’ விஜயகாந்த் இன்று (28.12.2023) காலை 6.10 மணியளவில் மறைவு என்ற செய்தி தேமுதிகவிற்கும், திரையுலகிற்கும், உலகில் உள்ள அனைத்து தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும். ‘கேப்டன்’ விஜயகாந்த்-ன் உடலுக்கு தீவுத்திடலில் அஞ்சலி செலுத்தும் வகையில், பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், மற்றும் கலைத்துறையை சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் நாளை சென்னை, 29.12.2023 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு அவரின் உடல் வைக்கப்படுகிறது. விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலிருந்து மதியம் 1.00 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து, இறுதிச்சடங்கானது 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இவ்வாறு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
80's90sகேப்டன்விஜயகாந்த்captaincaptain vijayakanthDMDKfansKollywoodMoviesnews7 tamilNews7 Tamil UpdatesPoliticianRIP CaptainRIP VijayakanthSuper Hit MoviesTamilNaduVijayakanth
Advertisement
Next Article