For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

TNPSC குரூப் 1 - இறுதி முடிவுகள் வெளியானது!

குரூப் 1 தேர்வு இறுதி முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது.
03:25 PM Apr 22, 2025 IST | Web Editor
tnpsc குரூப் 1    இறுதி முடிவுகள் வெளியானது
Advertisement

குரூப் 1 பிரிவின் கீழ்  துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் நிரப்புகிறது. இந்த ஆட்சேர்ப்பு  முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மூன்று நிலைகளில் நடைபெறுகிறது.

Advertisement

அந்த வகையில், 2024- ஆம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு அறிவிக்கை கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. துணை ஆட்சியா் 16, காவல் துணைக் கண்காணிப்பாளா் 23, வணிகவரி உதவி ஆணையா் 14, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளா் 21, ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் 14, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரி பணியிடங்கள் தலா 1 ஆகிய 90 காலிப் பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூலை 13 ஆம் தேதி  நடைபெற்றது.

தொடர்ந்து அந்தத் தோ்வில் தேர்ச்சி பெற்றோருக்கு கடந்த டிசம்பர் 10 முதல்  13ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வு நடைபெற்றது. முதன்மைத் தேர்வில் தேர்வானவர்களுக்கு கடந்த ஏப்ரல்  7 ஆம் தேதி முதல் 9 ஆம் வரை நேர்காணல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்தது. இந்த நிலையில், குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, இறுதி தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

முடிவுகளை தெரிந்துகொள்வதற்கான லிங்க்: https://www.tnpsc.gov.in/document/Oraltestmarks/RL_G1_04_2024.pdf

Tags :
Advertisement