For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அந்தகன் படத்தின் முதல் பாடலை வெளியிடும் விஜய்!

06:48 PM Jul 22, 2024 IST | Web Editor
அந்தகன் படத்தின் முதல் பாடலை வெளியிடும் விஜய்
Advertisement

நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள அந்தகன் திரைப்படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய் வெளியிடுகிறார். 

Advertisement

வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கிய பிரசாந்த் தெலுங்கில் வினய விதய ராமா படத்தில் ராம்சரணுக்கு அண்ணனாக நடித்திருந்தார். அதன்பின் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில், தற்பொழுது ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அந்தகன் பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, தபு ஆகியோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தின் ரீமேக் ஆகும்.

இப்படத்தில் கார்த்திக், சிம்ரன், வனிதா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த் சமுத்திரகனி என ஏராளமானோர் நடித்துள்ளனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலை நடிகர் விஜய் நாளை மறுநாள் (24.07.2024) வெளியிடுகிறார்.  அந்தகன் ஆந்தெம் (anthagan anthem) என்கிற இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி பாடியுள்ளனர்.

Tags :
Advertisement