Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவை வெறியேற்றிய பிறகு பிரச்னை குறித்து பேசுகிறார்கள் - இபிஎஸ் குற்றச்சாட்டு!

10:49 AM Jun 26, 2024 IST | Web Editor
Advertisement

சட்டப்பேரவையில் இருந்து வேண்டுமென்றே திட்டமிட்டு அ.தி.மு.க.வை வெறியேற்றிய பிறகு பிரச்னை குறித்து பேசுகிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார்.  

Advertisement

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து சட்டசபையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு விவாதம் நடத்த அதிமுகவினர் வைத்த கோரிக்கையை ஏற்க சபாநாயகர் அப்பாவு இன்றும் மறுத்து விட்டார்.  அதிமுக எம்எல்ஏக்கள் சிபிஐ விசாரணை கோரி முழக்கமிட்டதால் அமளி ஏற்பட்டது.  அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு சபநாயகர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில்,  சட்டப்பேரவைக்கு வெளியே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:-

சட்ட விதி 56-ல் பேரவையின் பிற நிகழ்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.  காலையே சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை சந்தித்து கோரிக்கை அளித்தோம்.  விதிப்படி வந்தால் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேசலாம் என பேரவைத் தலைவர் சொன்னார்.

விதியை பின்பற்றி பேசினாலும் பேச அனுமதி மறுக்கிறார்.  சட்டபேரவைத் தலைவர் அப்பாவு நடுநிலையோடு இல்லை, பிரச்னையின் ஆழத்தை கருதி பேரவைத் தலைவர் அப்பாவு நேரம் கொடுத்திருக்க வேண்டும்.

கேள்வி நேரத்தின் போது எங்களை வெளியேற்றி விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுக்கிறார்.  எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயம், ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம்.  அதிமுக ஆட்சிக் காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது.  சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து திமுக அரசு பேச வாக்கு அரசியல் தான் காரணம்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு தீர்மானம் கொண்டு வருகிறார்கள். வேண்டுமென்று திட்டமிட்டு அ.தி.மு.க. வெறியேறிய பிறகு பிரச்சனை குறித்து பேசுகிறார்கள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Tags :
AIADMKAssembly SessionEdappadi palanisamyMLASpeaker AppavuTN AssemblyTN Govt
Advertisement
Next Article