“மாற்று அரசியல், மாற்று சக்தி என்று ஏமாத்து வேலை செய்ய இங்கு வரவில்லை!” #TVK மாநாட்டில் தலைவர் விஜய் பேச்சு!
மாற்று அரசியல், மாற்று சக்தி என்று ஏமாத்து வேலை செய்ய இங்கு வரவில்லை என தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியுள்ளார்.
தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று ( அக்.27ம் தேதி) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய் கூறியதாவது :
"மக்களுக்கு கொண்டு வர அரசியல் திட்டம் எல்லாம் மிகவும் பிராடிக்கலாக இருக்க வேண்டும். வொர்க் அவுட் ஆகாத திட்டம் எல்லாம் நமக்கு தேவையில்லை. மீன் பிடிச்சு கொடுக்க கூடாது. அது தப்பு மக்களுக்கு மீன் பிடிக்க கத்துக் கொடுக்கனும். அப்படி இப்படி சொல்லிட்டு இருப்பாங்க. ஆனா எங்களோட அரசியல் திட்டமே வேற. முடிஞ்சவங்க மீன் பிடிக்கட்டும் முடியாதவங்களுக்கு நாம மீன் பிடிச்சு அவங்களுக்கு கொடுத்து வாழவைப்போம்.
இதையும் படியுங்கள் : “மாநில சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும்!“ #TVK செயல் திட்டங்கள் சொல்வது என்ன?
நம்மளோட அரசியல் கட்சி எப்போதும் எதார்த்தமாக இருக்கும் . இந்த மாற்று அரசியல் , மாற்று சக்தி, அத பண்றேன் இத பண்றேன்னு இந்த ஏமாத்து வேலை செய்ய இங்கு வரவில்லை. ஏற்கனவே இருக்குற 11-12 அரசியல் கட்சியில் நானும் ஒரு ஆளாக மாற்று அரசியல்-ன்னு சொல்லிகிட்டு, இந்த எக்ஸ்டரா லக்கேஜ்ஜா நான் இங்கு வரவில்லை. மாற்று அரசியல், மாற்று சக்தி என ஏமாற்றுவது எங்கள் வேலை இல்லை. ஏமாற்று சக்திகளிடம் இருந்து மக்களை பாதுகாப்பது தான் எங்களது வேலை"
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.