For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விஜே சித்து இயக்கும் 'டயங்கரம்' படத்தின் தொடக்க விழா...!

பிரபல யூடியூபர் விஜே சித்து இயக்கி நடிக்கும் டயங்கரம் படத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
06:39 PM Oct 27, 2025 IST | Web Editor
பிரபல யூடியூபர் விஜே சித்து இயக்கி நடிக்கும் டயங்கரம் படத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
விஜே சித்து இயக்கும்  டயங்கரம்  படத்தின் தொடக்க விழா
Advertisement

சமூக வலை தளமான யூடியூப்பில்  விஜே சித்து. சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றிய  இவர் விஜே சித்து விலாக்ஸ் மூலம் பிரபலமானார். ஹர்ஷத் கான் உள்ளிட்ட இவரது குழுவினர் செய்யும் சேட்டைகள் அடங்கிய வீடியோக்கள் யூடியூபில் எக்கச்சக்க பார்வையாளர்களை கவருகிறது.

Advertisement

சமீபத்தில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படத்தில்  சித்து மற்றும் ஹர்ஷத் கான் ஆகியோர்  நடித்து இருந்தனர்.

இந்த நிலையில் விஜே சித்து, டயங்கரம் என்னும் படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வேல்ஸ் பிலிம் இண்டெர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நாயகனாக விஜே சித்து நடிக்கிறார். மேலும் படத்தில்  நட்டி நட்ராஜ், காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான் , 'ஆதித்யா' கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பி. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார்.

இப்படம் சமகால இளைய தலைமுறையினரின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகிறது.

இந்த நிலையில் டயங்கரம் படத்தின் தொடக்க விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எல் ஏ ஸ்டுடியோவில் சிறப்பாக நடைபெற்றது.

தொடக்க விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். தமிழ் திரையுலகத்தை சார்ந்த ஏராளமான பிரபலங்கள் நேரில் வருகை தந்து படக் குழுவினரை வாழ்த்தினர்.‌

இதனிடையே  தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் - வி‌ ஜே சித்து- இளவரசு கூட்டணியில் வெளியான இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ வீடியோ,  இணையத்தில் வெளியாகி மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement