“விஜய் திமுக எதிர்ப்பை தீவிரப்படுத்த வேண்டும்” - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!
சென்னை மணப்பாக்கத்தில் ஆயுர்வேதிக் சென்டரில் மருத்துவ முகாம், மருத்துவ சேவை, மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முகாமை திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “மொழிகளை வைத்து பாஜக இணைக்கவே நினைக்கிறது , பிரிக்க நினைக்கவில்லை நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு எதிராக பாஜக நடந்து கொள்வதாக முதலமைச்சர் பொய் கூறுகிறார். காந்தி என்ற பெயரே எங்களுக்கு படிக்காது என கூறிவருகின்றனர். ஆனால், பிரதமர் தூய்மைத் திட்டங்களை காந்தியின் பெயராலே தொடங்கி வைக்கிறார்.
காந்தியை திமுக இதுவரை கொண்டாடியதே கிடையாது. தமிழ்நாட்டில் 100 நாள் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன, கணக்கை சரிபார்க்கும் வரை நிதி தரமுடியாது என கனிமொழி எம்.பி-க்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார் பெண்கள், ஆண்கள் என தனித்தனியாக வேறு வேறான அளவில் 100 நாள் திட்டத்தில் ஊதியம் கொடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டிற்கான 7300 கோடியை வழங்க மத்திய அமைச்சர் சௌஹான் தயாராக இருந்தார். ஆனால், அவர் தமிழ்நாடு வந்தபோது அவரை இங்குள்ள அமைச்சர்கள் சந்திக்கவில்லை. நிதி ஆயோக் கூட்டத்திற்கு முதலமைச்சர் ஏன் செல்லவில்லை?.
எப்போதும் மத்திய அரசை குற்றம் சொல்லும் ஈகோவை முதலமைச்சர் கைவிட வேண்டும். முதல்வர் மருந்தகத்தில் போதுமான மருத்துகள் இல்லை என மக்கள் தவித்து வருகின்றனர். 2வது இடத்திற்கான போட்டியில் எங்களை அரசியல் கட்சிகள் முன்னிலைப்படுத்தாவிட்டாலும் மக்கள் எங்களை முன்னிலைப்படுத்துவார்கள். திமுக கூட்டணிக் கட்சிகள் அதிருப்தியில்
உள்ளனர்.
எதுகை மோனைக்கு வேண்டுமானால் விஜய் பேசுவது சரியாக இருக்கும். விஜய் முதலில் திமுக எதிர்ப்பை நீங்கள் தீவிரப்படுத்த வேண்டும் விஐய்-ன் படம் தெலுங்கில் டப்பிங் ஆகிறது : பிற மாநிலங்களில் விஜய் படம் நன்றாக ஓடுகிறது. படத்திற்கு பல மொழி வேண்டும். ஆனால் பாடத்திற்கு பல மொழிகள் கூடாதா.? செங்கோட்டையன் சந்திப்பு குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஊராட்சிகளை இணைத்து நகராட்சிகளை உருவாக்குவதன் மூலம் delimitation-ல் தமிழ்நாடு அரசு ஈடுபடுகிறது. விஜயின் பேச்சில் தெளிவற்ற தன்மைதான் உள்ளது. விஜய்-ன் வாழ்க்கை விரிவடைந்ததால் அவருக்கு பனையூர் தேவைப்பட்டது. சாலி கிராமத்தில் இருந்து பனையூர் சென்றார். மக்களின் வாழ்க்கை விரிவடைவதால் பரந்தூர் தேவைப்படுகிறது.
தமிழ்நாடு அரசு கொடுக்கும் இடத்தில்தான் மத்திய அரசு விமான நிலையம் அமைக்கும். பிரதமர் மோடியை எதிர்க்கும் தைரியம் தனக்கு இருப்பதாக கூறும் விஜய் படத்தின் தயாரிப்பாளர் , இயக்குநரை எதிர்த்து பேசியது உண்டா? தமிழ்நாடு அரசியலை இன்னும் அழுத்தம் , ஆழமாக கற்றுக் கொண்டு விஜய் பேச வேண்டும். அண்ணாமலை கட்சிக்காக உழைத்து கொண்டிருக்கிறார். பாஜகவில் 6 ஆண்டு மாநிலத் தலைவர் பதவிக்காலம் நிறைவடைந்த ஒருவர் , குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மாநிலத் தலைவர் பதவிக்கு வர முடியும்”
இவ்வாறு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.