For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“விஜய் எங்களுக்கு எதிரி இல்லையே...” - கூட்டணி குறித்து ஜெயக்குமார் பதில்!

தவெக தலைவர் விஜய் உடனனா கூட்டணி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
08:05 PM Jan 27, 2025 IST | Web Editor
தவெக தலைவர் விஜய் உடனனா கூட்டணி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
“விஜய் எங்களுக்கு எதிரி இல்லையே   ”   கூட்டணி குறித்து ஜெயக்குமார்  பதில்
Advertisement
தமிழக வெற்றி கழக கட்சியை நடத்தி வரும் விஜய், கடைசியாக எச். வினோத் இயக்கத்தில் தனது 69 படத்தில் நடிப்பதாக அறிவித்தார். இப்படம் அரசியல் கதைக்களத்தில் உருவாகி வருதாக கூறப்படும் நிலையில், அதற்கேற்ப படத்திற்கு  ‘ஜனநாயகன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
Advertisement

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று (ஜன.26)  வெளியாகி இருந்தது. குறிப்பாக செகண்ட் லுக் போஸ்டரில் “நான் ஆணையிட்டால்...” என்ற எம்ஜிஆர் பாடல் வரிகளும், விஜய் சாட்டையை சுழற்றுவதுபோல் படத்திற்கான விஜயின் லுக்கும் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  “எம்ஜிஆரின் பாடல்களும் அதிலுள்ள தத்துவங்களும் கருத்துகளும் இன்றைக்கும் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கிறது. இன்றைக்கு வரும் பாடல்கள் எங்கு போகிறதென்றே தெரியவில்லை. அவர் தவிர்க்க முடியாத சக்தி” என்றார்.

தொடர்ந்து ஜெயக்குமாரிடம் தவெக உடன் அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் “விஜய் எங்களுக்கு எதிரி இல்லையே. அவர் ஒரு கட்சி ஆரம்பித்து கொள்கையை பிரகடனபடுத்திறார். எங்கள் கட்சியின் கொள்கையை நாங்கள் பிரகடனப்படுத்துகிறோம் அவ்வளவுதான். அவர் வேலையை அவர் பார்க்கிறார். எங்கள் வேலையை நாங்கள் பார்த்து வருகிறோம்” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Tags :
Advertisement