"விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம்!
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததை அடுத்து ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் எனக்கூறி சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, "பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு மக்கள் இறந்துகொண்டிருக்கும்போதே, கட்சித் தொண்டர்களை விட்டுவிட்டு நிர்வாகிகள், தலைவர்கள் ஓடிவிட்டனர். ஒருவர் கூட, இந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்கவில்லை. கூட்டம் அதிகம் கூடும்போதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முன்னெச்சரிக்கைகளாக விதிக்கப்பட்ட எந்த நிபந்தனைகளையும் கட்சியினர் பின்பற்றவில்லை.
சம்பவத்துக்காக வருத்தம் கூட தெரிவிக்காததே, கட்சித் தலைவரின் மனநிலையை தெளிவாகக் காட்டுகிறது. தவெக தலைவருக்கு தலைமைப் பண்பே இல்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. விஜய் பிரசார வாகனம் மோதிய போதுகூட, விஜய் வாகனம் பறிமுதல் செய்யப்படவில்லை. என்ன மாதிரியான கட்சி இது? கருல் நடைபெற்றது மனிதனால் நிகழ்த்தப்பட்ட பேரழிவு" என்று நீதிபதி செந்தில்குமார் கண்டனம் தெரிவித்தார்.