போஸ்டர் அடி அண்ணன் ரெடி!... மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய் - ரசிகர்கள் உற்சாகம்...
07:40 PM Nov 01, 2023 IST 
                    | 
                            Web Editor
                
                 
    
                
                
     
            
    
             
             
    
    
        
        
    
    
    
        
        
         
    
      
    
                 Advertisement 
                
 
            
        லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் தொடங்கியுள்ளது.
                 Advertisement 
                
 
            
        படத்தில் இடம்பெற்றுள்ள மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலி கான், மடோனா செபாஸ்டின், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் அரங்கத்தில் வருகை தந்துள்ளனர். அங்கத்தில் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆரவாரம் செய்து லியோ பட நட்சத்திரங்களை வரவேற்றுள்ளனர். படம் ரூ. 550 கோடியை தாண்டி வசூலித்துள்ள நிலையில், வெற்றி விழா கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
கடைசியாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நடிகர் விஜய் பின்னணி இசை உடன் அரங்கத்தில் நுழைந்துள்ளார். அவர் நுழைந்தவுடன் அவரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தளபதி தளபதி என கரகோஷமிட்டனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 Next Article