அடுத்த மாதம் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா நிச்சயதார்த்தம்?... உண்மையா?...
நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2016ஆம் ஆண்டு, பெல்லி சூப்புலு என்னும் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர், நடிகர் விஜய் தேவரகொண்டா. அதன்பின், இவரது நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான அர்ஜூன் ரெட்டி படம் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இதன் மூலம் இவர் தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய நடிகராக உருவெடுத்தார்.
தொடர்ந்து இவரது நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் தான் ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் ஒன்றிணைந்தனர். இவர்களின் இன்கேம் இன்கேம் பாடல் பான் இந்தியா அளவில் ஹிட்டானது. இதன் பிறகு இவர்களது ஜோடியை ரசிகர்கள் அதிகம் விரும்பினார்கள்.
அடிக்கடி இருவரும் ஒன்றாக சுற்றுவது, நெருக்கமாக பழகுவது என சமூக வலைதளங்களில் வெளியாகும் புகைப்படம் மூலம் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக பேசப்பட்டது. ஆனால் இருவர் தரப்பில் இருந்தும் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில், இந்தாண்டு, பிப்ரவரி இரண்டாம் வாரம் விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த செய்தி காட்டு தீ போல் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், ராஷ்மிக மந்தனா மற்றும் விஜய தேவரகொண்டவுக்கு நெருக்கமானவர்கள் இந்த தகவல் உண்மையால்ல என விளக்கம் அளித்துள்ளனர். இருவரின் திருமணத்தையும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது வெளியான செய்தி ஏமாற்றத்தை அளித்துள்ளது.