For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கு போன் போட்ட #Vijay… 5 நிமிடம் நீடித்த உரையாடல்!

03:00 PM Oct 09, 2024 IST | Web Editor
பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கு போன் போட்ட  vijay… 5 நிமிடம் நீடித்த உரையாடல்
Advertisement

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸூக்கு தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது 56வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டும், சமூக வலைத்தளங்கள் மூலமும் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தொலைப்பேசியில் இவர்கள் இருவரும் 5 நிமிடம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கியதைத் தொடர்ந்து தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டை வரும் 27 ம் தேதி அன்று விக்ரவாண்டியில் நடத்தவுள்ளார். அந்த மாநாட்டுக்கு விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருவரும் மாறி மாறி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரிய விஷயமாகக் கவனிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement