விஜய் ஆண்டனியின் 26வது பட அப்டேட் வெளியீடு!
தமிழ் சினிமாவில் ‘சுக்ரன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. பின்னர் ‘நான்’ படத்தின் மூலம் விஜய் ஆண்டனி கதாநாயகனாக அவதாரம் எடுத்தார். அதனை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் இவரது நடிப்பில் உருவான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ரோமியோ, மழை பிடிக்காத மனிதன், மற்றும் ஹிட்லர் போன்ற படங்கள் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றன.
இதனையடுத்து, லியோ ஜான் பால் இயக்கும் புதிய திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன், அஜய் தீஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரிகடா, வினோத் சாகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் இப்படத்தை தயாரிக்கிறது.
Justice has a name ⚖️#VA26 First look | 19th | 5PM@Dir_Joshua @vijayantonyfilm pic.twitter.com/U0gasdiYwA
— vijayantony (@vijayantony) May 17, 2025
இப்படத்திற்கு ‘மார்கன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஜுன் 27ம் தேதி வெளியாகிறது. விஜய் ஆண்டனி ‘சக்தித் திருமகன்’ எனும் படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படம் விஜய் ஆண்டனியின் 26வது படமாக உருவாகிறது. இப்படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மறுநாள் (மே 19) மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.