For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'ரிங்கு ஜக்கு' | வெளியானது #Hitler திரைப்படத்தின் 3வது பாடல்!

05:33 PM Sep 22, 2024 IST | Web Editor
 ரிங்கு ஜக்கு     வெளியானது  hitler திரைப்படத்தின் 3வது பாடல்
Advertisement

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘ஹிட்லர்’ திரைப்படத்தின் 'ரிங்கு ஜக்கு' பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கியவர் விஜய் ஆண்டனி. இவர் தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குநர் என பன்முகம் காட்டி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘ரோமியோ’, ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.

‘படைவீரன்’, ‘வானம் கொட்டட்டும்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய தனா இயக்கத்தில் ‘ஹிட்லர்’ என்கிற புதிய திரைப்படத்திலும் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். இப்படத்தில் ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை செந்தூர் ஃபிலிம் இண்டர்னேஷனல் தயாரித்துள்ளது. இப்படம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகவுள்ளது. .

இதையும் படியுங்கள் :ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் #Tirupati தேவஸ்தான நிர்வாகிகள் திடீர் சந்திப்பு!

இந்நிலையில், ‘ஹிட்லர்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்றது. படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, 'டப்பாஸ்' `அடியாத்தி' ஆகிய பாடல்களும் வெளியாகி வைரலாகின. இந்நிலையில், விவேக் - மெர்வின் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து 'ரிங்கு ஜக்கு' வீடியோ பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement